கழுத்தில் சணல் வெடிகுண்டு! கையில் மண்ணெண்ணெய் கேன்! மாமியார் வீட்டுக்குள் மருமகனால் அரங்கேறிய விபரீதம்!

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கூறி கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெய்வேலியில் டவுன்ஷிப் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவரது மாமியாரின் வீடு அமைந்துள்ளது. மணிகண்டன் தன்னுடைய மனைவியை பிரிந்து கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வருகிறார்.இதனால் மனவிரக்தி அடைந்த அவர், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி மாமியார் வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தன்னுடைய உடலை சுற்றி பயங்கரமான வெடி குண்டான நாட்டு சணல் வெடிகுண்டை கட்டியிருந்தார். பின்னர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ குளிப்பதற்கும் முயற்சித்தார்.

இந்த சம்பவங்களை கண்டு பதறி போன மணிகண்டனின் மாமியார் நடுரோட்டில் வந்து புலம்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற முதன்மை காவலர் பாலச்சந்திரனிடம் நிகழ்ந்தது கூறி உதவி கேட்டுள்ளார்.

உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தீக்குச்சியை தேடிக்கொண்டிருந்தார். அப்போது பாலச்சந்திரன் திறமையுடன் மணிகண்டன் குழந்தையை எடுத்து அவரிடம் காட்டியுள்ளார். குழந்தையைப் பார்த்தவுடன் மணிகண்டனின் மனதை வெகுவாக மாறியது. உடனடியாக கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை அவர் கீழே போட்டார். 

கிழக்கு போட்டவுடன் காவல்துறையினர் அவர் உடலில் சூழப்பட்டிருந்த சணல் வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் தான் ஏற்கனவே விஷம் அருந்தியதாக கூறினார். காவல்துறையினர் அவரை என்.எல்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் திறமையாக செயல்பட்ட முதன்மை காவலர் பாலச்சந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.