நாங்கள் எதிரியாக பார்ப்பது திமுகவை மட்டுமே! மற்றவர்கள் வெறும் உதிரிகள் மட்டுமே! செல்லூர் ராஜு அதிரடி!

தமிழக அரசியலில் பொதுவாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் மோதல் நிலவி வரும்.


ஆனால் தற்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளிலேயே மோதல் ஏற்படும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய குருமூர்த்தி அதிமுகவை சீண்டும் வகையில் சில கருத்துக்களை பேசினார். இதனால் தங்களது கட்சியை அசிங்கப்படுத்திய பாஜக தூதுவரை எதிர்க்க அதிமுக முன் வரவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் குருமூர்த்தியின் பேச்சை எதிர்த்து அமைச்சர் ஜெயக்குமார், "ஆணவத்தின் உச்சம்" என்று அவருக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார். அதேபோல் அமைச்சர் செல்லூர் ராஜூவும் குருமூர்த்தியின் பேச்சை எதிர்த்து  மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அந்தத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வதற்காக செல்லூர் ராஜு அங்கு சென்றிருந்தார். தன்னுடைய ஆய்வை முடித்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரை தரக்குறைவாக பேசி வருகிறார்.

அரசியலைப் பொறுத்தவரை திமுக மட்டுமே எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எல்லாம் உதிரிகள் தான் .தனிப்பட்ட நபர் எங்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த பேச்சு தங்களை சீண்டிய குருமூர்த்திக்கு தக்க பதிலாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.