அமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்டாலின்.

அமைச்சர் வீரமணிக்கும் தி.மு.க. செயலாளர் துரைமுருகனுக்கும் ரகசியத் தொடர்பு நீடிப்பதாக நீண்ட காலமாகவே பேச்சு இருந்துவந்தது. அதன்படி -ஜோலார்பேட்டையில் வீரமணி ஜெயிக்க துரை உதவி செய்வார். காட்பாடியில் துரை வெற்றி பெற, வீரமணி உதவுவார். இரண்டும் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள்.


இந்த விஷயம் சமீபத்தில் வெளியே கசிந்துவிட்டது. அதாவது, சமீபத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில், தி.மு.க., கிளைகளை அதிகமாக உருவாக்கிய ஒன்றியச் செயலர் உமாவின் பதவி பறிக்கப்பட்டது. இவருக்குப் பதிலாக துரைமுருகனுக்கும் அவர் மகன் கதிர் ஆனந்துக்கும் வேண்டப்பட்ட கவிதா என்பவரின் அக்கா கணவர் நியமிக்கப்பட்டார். இந்த புகைச்சல் கடுப்பாக மாறி, ஸ்டாலினுக்கு புகார் போனது.

அவர் உமாவை வரச் சொன்னார். வந்தார். துரையும், கதிரும் வீரமணிக்காக தன்னை பலி கொடுத்து விட்டனர் என்றார். தந்தை - மகன் குறித்த வேறு சில விஷயங்களையும் போட்டு உடைத்தார். ஸ்டாலின் அதிர்ச்சி அடையவில்லை. அவருக்கு தெரியாதா, 'சீனியர்'களின் சித்து விளையாட்டுகள். என்றாலும், உமா வேண்டியபடி விசாரணைக்கு உறுதி அளித்தார்.

வழக்கறிஞர் காந்தியை விசாரணை அதிகாரியாக ஜோலார்பேட்டைக்கு அனுப்பினார். உடன் பிறப்புகள் கொண்டுவந்து கொட்டினர் தகவல்களை. விலாவாரியாக அறிக்கை கொடுத்தார். அதை படித்ததும், ஸ்டாலினுக்கே கோபம் வந்துவிட்டது. திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் ஆலங்காயம் தேவராஜனை அழைத்து விசாரித்தார். பூனை வெளியே குதித்து விட்டது என புரிந்து கொண்டார் தேவராஜன்.

ஜோலார்பேட்டையை மையமாக வைத்து கட்சியில் நடக்கும் மற்ற கூத்துகளையும் விவரித்து உள்ளார்.கண் சிவந்தார் தளபதி. துரைமுருகனை அழைத்து, 'என்ன இது?' என்று எகிறியிருக்கிறார். முத்தாய்ப்பாக, “கதிர் இனிமேல் வேலூர் எல்லை தாண்டக் கூடாது; வேலியும் தாண்ட வேண்டாம்,” என எச்சரித்துள்ளார். கூடவே, உமாவை மீண்டும் ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலராக நியமித்து முரசொலியில் அறிவித்து விட்டார். 

இனியாவது கட்சிக்கு விசுவாசமாக இருப்பாரா துரைமுருகன்?