தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் எப்போது திறப்பு..? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார்.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பள்ளிக்கல்வியில் திறக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் பற்றி நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் நீட் தேர்வு பயிற்சி, மாணவர் சேர்க்கை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு ஆகியவற்றை பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்தார். 

அதாவது, இந்த ஆண்டு நடக்கவுள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. 9 கல்லூரிகளில் கிட்டத்தட்ட 7300 மாணவர்களுக்கு 35 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவர் என்று நம்புகின்றோம்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை, தேர்வு எழுதி மதிப்பெண்கள் வெளியான பிறகு அரசு முடிவெடுக்கும். கோபிசெட்டிபாளையத்தில் 73 கோடி மதிப்புள்ள குடிமராத்து பணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பவானி ஆற்றின் குருக்கே 4 அனைகள் கட்டுவதற்கு 102 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மீண்டும் தொடங்க உள்ளன" என்று கூறினார்.

இந்த பேட்டியானது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.