ஏய் மாஸ்க் எங்க? ஏன் கூட்டமா நிக்குறீங்க..! மதுரையை தெறிக்கவிட்ட சசிக்குமார்! என்னாச்சு தெரியுமா?

மதுரையில் ஒரு நாள் தன்னார்வலராக களம் இறங்கிய நடிகர் சசிக்குமார் தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வந்தவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

"நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார். மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.