சிறையில் சொகுசு வாழ்க்கை! ரூ.2 கோடி லஞ்சம்! உண்மையானது ரூபாவின் குற்றச்சாட்டு! பரபர விசாரணை அறிக்கை!

சசிகலா சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தற்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிறையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கடந்த 7-7-2017-ம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பாக, சிறையிலிருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்றதாக கூறப்பட்டது. அதற்கான வீடியோ பதிவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. 

இது மட்டுமில்லாமல் சசிகலாவிற்கு சிறையில் எல்லாவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதாகவும், கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.ஜி ரூபா கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குற்றத்தை முன்வைத்தார். மேலும் இந்த குற்றங்களை அனைத்தையும் சேகரித்து அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தார் டிஜிஜி ரூபா.

அந்த அறிக்கையில் , இந்த சலுகைகளை சசிகலாவிற்கு வழங்குவதற்காக அவர் சிறைத்துறை அதிகாரி சத்யநாராயணராவ்வுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கியதாக அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சிறையை விட்டு இரவு நேரத்தில் வெளியே வந்து ஷாப்பிங் செய்த வீடியோ காட்சி ஒன்றும் அந்த அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.