பிக்பாஸ் 2 பைனலில் கலந்து கொள்ளாததற்கு காரணம் இது தான்..! உண்மையை போட்டு உடைத்த சித்தப்பு சரவணன்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக முடிவு பெற்றது.


இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் மிகப்பிரம்மாண்டமாக உலகநாயகன் உலகநாயகன் கமலஹாசன் ஆல் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் சித்தப்பு சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து கிடந்த ரசிகர்கள் இடத்தில் இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்று தான் கூற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சித்தப்பு சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். அதாவது சரவணன், ஒரு எபிசோடில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசனிடம் தானே முன்வந்து ஒரு முறை பேருந்தில் தானும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

இவரது கூற்றுக்கு மக்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு வலுத்தது. இதனையடுத்து பிக்பாஸ் சரவணனை யாருமே எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேறினார். இந்தக் கோபத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி விழாவில் சரவணன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. 

நடிகர் சரவணனை போலவே நடிகை மதுமிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென்று வெளியேறினார். அதாவது சக போட்டியாளர் இடம் அவருக்கு ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி மதுமிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டது. ஆகவே மதுமிதாவும் சரவணனும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி விழாவிற்கு வரவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன் ? என்று நடிகர் சரவணனிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சரவணன், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் எங்குமே பேசக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன் . மேலும் அந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு ஒரு விஷயமே கிடையாது.

தற்போது நான் என் படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். என்னுடைய ஒரே நோக்கம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டும் தான் என்று கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் தேனி மாவட்டத்தில் மருத என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் பிசியாக நடித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.