சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி வேல்முருகன் கட்சியில் மகளோ மோடி கட்சியில்..! ஸ்டாலினுக்கு ராசியில்லையாமே..!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பா.ஜ.க. பேசிக்கொண்டே இருக்கிறது. அதற்கு வசதியாக ஆள் பிடிக்கும் படலம் நடந்தேறிவருகிறது. ரஜினிக்கு குறி வைத்த பா.ஜ.க.வுக்கு ராதாரவிதான் கிடைத்தார்.


அந்த வகையில் கிருஷ்ணகிரியில் 3,000 பேர் பா.ஜ.க.வில் சேர்கிறார்கள் என்று மாபெரும் இணைப்புவிழா நடந்தது. அதற்காக பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் வரவழைக்கப்பட்டிருந்தார்.

ஒரு முக்கியமான வி.ஐ.பி. இன்று பா.ஜ.க.வில் சேர்கிறார் என்று சொல்லப்பட்டதால், பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். அதன்படி இன்று பா.ஜ.க.வில் சேர்ந்தவர் யார் தெரியுமா? சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி முதலில் பா.ம.க.வில் இருந்து இப்போது வேல்முருகன் கட்சியில் இருக்கிறார். இந்த நிலையில் அவளது மகள் வித்யா திடீரென பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். மோடியின் கரத்தை வலுப்படுத்தியே தீருவேன் என்று சொல்கிறாராம் வித்யா. அப்படின்னா பா.ஜ.க.வுக்கு நல்ல யோகம்தான்.

இந்தக் கூட்டத்தில் முரளிதரராவ், ‘‘பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக முடியாது. ஸ்டாலின் அதிகம் பொய் பேசுகிறார். நமது தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்காரனுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர்’’ என்று கூறியிருக்கிறார்.

அதானே, தமிழகத்தில் பா.ஜ.க.தானே அதிர்ஷ்டமான கட்சி.