ஊரடங்கு நேரத்திலும் அலம்பல்..! வீடியோ காலில் கவர்ச்சி போட்டோ சூட்..! கோமாளி நடிகையின் ஏடா கூட செயல்!

பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே வீடியோ கால் மூலம் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கோமாளி திரைப்படத்தில் இவர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் பப்பி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சம்யுக்தா ஹெக்டே எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைப்பட படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் நடிகைகளும் தங்களது வீடுகளிலேயே அடைபட்டு உள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் நடிகை சம்யுக்தா. அனுதினமும் புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது வீடியோ கால் மூலம் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான முறையில் வீடியோகால் மூலம் நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட சம்யுக்தா ஹெக்டே புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.