ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்! ஒன்று கூடி வாழ்த்திய உறவுகள்! யார் தெரியுமா?

2 இந்தியர்கள் வாழ் அமெரிக்கர்கள் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அமெரிக்காவில் நியூஜெர்ஸி என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அமித்ஷா மற்றும் ஆதித்யா மடிராஜு என்ற 2 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமித்ஷா "ஸ்ப்ரிட்" என்ற நடனக்குழுவின் பொறுப்பாளர் ஆவார். ஆதித்யா பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக பழகி வருகின்றனர். 

இதனிடையே இருவரது நட்பும் காதலாக மாறுவதை இருவரும் உணர்ந்தனர். ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ இயலுமா என்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை யோசித்து உள்ளனர். அதன் பின்னர் அனைத்து சமுதாய எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும் என்பதனை உணர்ந்தனர். இருப்பினும் இருவரது காதலும் தூய்மையாக இருந்ததால் எதிர்ப்புகளை தைரியமாக எதிர்கொள்ள முன்வந்தனர். 

இருவரது குடும்பத்தினரிடமும் தகவலை தெரிவித்து சம்மதம் பெற்றனர். சில நாட்களுக்குகளுக்கு முன்னர் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்தனர். "எங்களுக்கு உதவிய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 2 நாட்களாக எங்களுக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணமுள்ளன. அனைவரிடமும் எங்களால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள்" என்று பதிவிட்டிருந்தனர்.

இந்த சம்பவமானது நியூஜெர்ஸி மாகாணத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.