கணவன் கேட்ட ஒரே கேள்வி! தூக்கில் தொங்கிய போலீஸ் மனைவி! ஏன் தெரியுமா?

கணவன் கேட்ட ஒரே கேள்வியால் அதிர்ச்சி அடைந்த மனைவி தூக்கில் தொங்கிய பரிதாபம் அரங்கேறியுள்ளது.


சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை அடுத்த காமக்காப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல மீனா. இவர் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஊர்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் கவியரசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் ஆறு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

   கவியரசன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவாசல் ஒன்றிய துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மனைவி செல்ல மீனா காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதால் அவ்வப்போது அவர் தாமதாக வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதனால் செல்ல மீனாவுக்கும் – கணவர் கவியரசனுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் செல்ல மீனாவை வேலைக்கு போகக்கூடாது என்று கவியரசன் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது.

   இந்த நிலையில் நேற்றும் செல்ல மீனா – கவியரசன் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து கவியரசன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். மறு நாள் காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாத காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் செல்ல மீனாவிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

   விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு செல்ல மீனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகியுள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் செல்லமீனாவின் கணவனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு மீண்டும் தாமதமாக வந்ததால் கோபத்தில் யாருடன் படுத்துவிட்டு வருகிறாய் என்று தான் கேட்டதாக கவியரசன் கூறியுள்ளார்.

   இதனால் தான் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கவியரசன் கூறி அழுதுள்ளார். ஆனால் செல்ல மீனா உடலில் காயங்கள் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் செல்ல மீனாவை குடிபோதையில் கவியரசன் கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.