எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுடன் இணைந்து பிக்பாஸ் சாக்சி..! ஏன் தெரியுமா? தெறி அப்டேட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ஆர்யாவுடன் " டெடி " என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


நடிகர் ஆர்யாவும் அவரது மனைவி சாய்ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் டெடி. `டிக் டிக் டிக்' படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் ஆர்யா நடிக்கும் `டெடி' படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில் படக்குழுவினர் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சாக்ஷி அகர்வால் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் அல்லது வைரலாக பரவி வருகிறது. இந்த திரைப்படத்தில் கருணாகரன் , சதீஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி இமான் அமைத்து வருகிறார். சாயிஷா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து நடிக்கும் மூன்றாவது திரைப்படம் டெடி என்பது குறிப்பிடத்தக்கது.