சைதை துரைசாமிக்கு சொந்தக் கட்சியினர் துரோகம்

சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் பிரிவு சிறப்பாக செயல்படத் தொடங்கியது. முன்பு 40 புகார்கள் வந்த புகார் எண்ணுக்கு ஒரே நாளில் 1500 முதல் 2000 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. எல்லாம் சிறப்பாக இயங்குகிறது என்று மேயர் சைதை துரைசாமி மகிழ்ச்சி அடைந்தார்.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 15

சென்னை மாநகராட்சியின் 1913 புகார் எண் பிரிவு சிறப்பாக செயல்படத் தொடங்கியது. முன்பு 40 புகார்கள் வந்த புகார் எண்ணுக்கு ஒரே நாளில் 1500 முதல் 2000 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. எல்லாம் சிறப்பாக இயங்குகிறது என்று மேயர் சைதை துரைசாமி மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால், அந்த நேரத்தில் வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றில், 1913 எண் புகார் பிரிவு மூலம் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று செய்தி வெளியானது. இந்த செய்தியைப் பார்த்ததும் சைதை துரைசாமி அதிர்ச்சி அடைந்துவிட்டார். அது தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்தபோது, நாளிதழில் வந்திருக்கும் செய்தியே உண்மை என்பதும், இத்தனை நாட்களும் புகார் பிரிவு சிறப்பாக நடைபெறுவதாக ஊழியர்கள் ஏமாற்றி வருவதை உணர்ந்தார்.

அந்த புகார் பிரிவின் செயல்பாடுகள் முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது தான் 4 ஒப்பந்தப் பணியாளர்கள் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திட்டமிட்டு குளறுபடி செய்து வருவது தெரியவந்தது. சைதை துரைசாமிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக அவர்களை சொந்தக் கட்சியினர் சிலரே பின்பக்கம் இருந்து இயக்குவதும் தெரியவந்தது.

அவர்கள் புகார்களை பதிவுசெய்வது மட்டுமே உண்மை. அந்த புகார்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு அனுப்புவதில்லை. ஆனால் புகாரை அனுப்பாமலே தகவல் தெரிவித்துவிட்டதாக பொய்யாக குறிப்பு எழுதியிருந்தனர். இந்த காரணத்தால் தெருவிளக்கு எரியாமை, குப்பை அகற்றப்பட்டாதது, தெரு நாய் தொந்தரவு போன்ற பிரச்னைகள் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லமால் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. மூன்று மாதங்களில் பெறப்பட்ட 7660 புகார்களில் 5160 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்ததை உணர்ந்து அதிர்ந்தார் மேயர். அந்த நான்கு பேர் மீதும் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் துப்புரவுப் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது, புகார் பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யும் பழக்கத்தைக் கொண்டுவந்தார். அதன் பிறகு அவ்வப்போது புகார் பிரிவு செயல்பாடு குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார். இதன் மூலம் புகார் பிரிவில் ஓரளவு முன்னேற்றம் தென்பட்டது என்றாலும், முழுமையான திருப்தி சைதை துரைசாமிக்குக் கடைசி வரையிலும் கிடைக்கவே இல்லை.

மேயரான பிறகும் சொந்தக் காரில் வந்தார் சைதை துரைசாமி. ஏன் தெரியுமா?

- நாளை பார்க்கலாம்.