அஜித்துக்கு வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்தவர் இவர் தான்! வெளியானது புது தகவல்!

நடிகர் அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது யார் என்ற ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.


இந்த தகவலை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று பேசிய எஸ்பி பாலசுப்ரமணியம், நடிகர் அஜித் சினிமாத்துறையில் அறிமுகமானது எப்படி என்ற சுவாரசியமான தகவலை வெளியிட்டார். 

அதாவது, அஜித்தும், எஸ்பிபியின் மகன் சரணும் ஸ்கூல் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும், சரணின் ஷூ மற்றும் ஆடைகளை அணிந்தவாறு, அஜித் விளம்பர படப்பிடிப்புகளில் கலந்துகொள்வாராம்.

சென்டிமென்ட் காரணமாக, அப்படி அஜித் செய்வது வழக்கமாம். 'இந்த பழக்கத்தின் அடிப்படையில், அஜித்தை, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் அறிமுகம் செய்துவைத்து, சினிமா சான்ஸ் வாங்கி தந்தேன்,' என்று எஸ்.பி.பாலசுப்ரமணியும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தகவல் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. மேலும் அஜித் டிவி, மேகசீன் உள்ளிட்ட யாருக்கும் பேட்டி கொடுக்காமல் இருப்பதால் அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று எஸ்பிபி கூறியுள்ளார்.