திருவண்ணாமலை உச்சியில் பதுங்கியிருந்த ரஷ்ய நாட்டு பெண்கள்..! டிரோன் மூலம் கண்டுபிடித்து தூக்கிய போலீஸ்!

திருவண்ணாமலை உச்சியின் மீது ஏறி தியானம் செய்ய சென்றிருந்த ரஷ்ய தம்பதியினரை போலீசார் டிரோன் மூலம் கண்டுபிடித்து மலையிலிருந்து கீழே இறக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவை சேர்ந்த விக்டர் மற்றும் டாடியானா என்ற தம்பதியினர் திருவண்ணாமலையில் உள்ள ஆன்மீக தளங்களை சுற்றிப்பார்க்க ஒரு மாதத்திற்கு முன்னர் திருவண்ணாமலை வந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆன்மீக தளங்களை சுற்றிப் பார்த்த பின்னர் இவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல இயலாமல் தவித்து வந்தனர்.

திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமத்திற்கு எதிரே உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்த இந்த ரஷ்ய தம்பதியினர் தங்களது நாட்டிற்கு செல்ல முடியவில்லை என்பதாலும், உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தாலும் விரக்தி ஏற்பட்டு அண்ணாமலையார் மலைமீது ஏறி தியானம் செய்வதற்காக சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ட்ரோன் மூலம் ஊரடங்கை ஆராய்வு செய்திருந்த போலீசார் இருவர் மலைமீது ஏறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து 3 மணி நேரத்தில் அவர்களை மலையில் இருந்து கீழே இறக்கி உள்ளனர். மலைமீது உண்ண உணவின்றி சிரமப்பட்டு அழுது கொண்டிருந்த ரஷ்ய தம்பதியினருக்கு போலீசார் உண்ண உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து உதவியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அறிவிப்பு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவரை அவர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் முறையாக செய்து பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் அவர்களது சொந்த நாட்டிற்கு முறையாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.