சுப நிகழ்வுகளில் தாம்பூலம் கொடுப்பது ஏன் தெரியுமா?

தாம்பூலம் தரிப்பது என்ற வெற்றிலை பாக்கு போடுகிற பழக்கத்திற்கு ஒரு விதிமுறையை வகுக்கப்பட்டது


காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேர வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் பாதுகாக்கும். மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்புச் சத்து அதிகம் எடுத்துகொள்ளப்பட வேண்டும். அது உணவில் உள்ள வாதம் என்கிற வாயுவைக் கட்டுப்படுத்தி விடும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. மேலும் பாக்கிலிருந்து வெளியாகிற துவர்ப்புத் தன்மை பித்தத்தை கண்டிப்பது. வெற்றிலையின் உரைப்புத் தன்மை கபத்தை நீக்குகிறது

ஒரு வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்தேறிய பிறகு வெற்றிலைகளைக் கட்டுக்கட்டாக காயவிடக் கூடாது. அவ்வாறு காய்ந்தால் நமக்குச் சுபகாரியங்கள் தடைபடக்கூடும். யாரும் தாம்பூலம் தரிக்கும் நிலையில் இல்லை என்றால் அந்த வெற்றிலைகளை பசுவிற்கு கொடுத்துவிடலாம். பசுக்கள் கிடைக்காத நகர்ப்பகுதியில் இருந்தால் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும்போது காய்ந்த வெற்றிலை சரகுகளை இட்டுப் புகை பிடிக்கலாம்.

பூஜை காலங்களில் பாக்குத்தூளை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் உள்ளபடியே வைக்காமல் பிரித்து பயன்படுத்துவது நல்லது. சாதாரண களிப்பாக்கு, கொட்டைப்பாக்கு பூஜையில் வைத்ததை நகை, பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் அப்பொருளைப் பன்மடங்காக உயர்த்தும். கடன் தொல்லை அதிகம் இருப்பவர்கள் கொட்டைப் பாக்கை லஷ்மீ வசீகர பூஜை செய்து பர்சில் வைத்துக் கொள்ள கடன் தீரும்.

பொதுவாக பாக்குத்தூள் அல்லது களிப்பாக்கை பொடி செய்து சாம்பிராணி தூபத்தோடு போட்டுப் புகை பிடித்தாலும் ஹோமங்களில் சேர்த்தாலும் யக்ஞ சாதனைகள் செய்பவர்களுக்கு குபேர சம்பத்து கூடக் கிடைத்துவிடும் என்கின்ற சாஸ்திரக் கருத்து உள்ளது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.