சதமடித்து மாஸ் காட்டிய முரளி விஜய்! தூத்துக்குடி அணியை கதற வைத்து வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி!

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியை வென்றுள்ளது.


டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது .அந்த அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமாக விளையாடிய 57 பந்துகளில் 101 ரன்கள் குவித்து சதமடித்தார் .தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியின் அதிசய ராஜ் டேவிட்சன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார் . 

பின்னர் களமிறங்கிய தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது . அந்த அணியின்  அக்ஷய்  சீனிவாசன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார் . இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

சதம் அடித்த முரளி விஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .