ரவுடிகள் வாட்ஸ் ஆப் குரூப்பில் சாமி 2 போலீஸ்! எஸ்ஐக்கு கொலை மிரட்டவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்! கெத்து காட்டிய அலப்பறை!

காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் மிரட்டும் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டில் குண்டு வீசுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றப்பிரிவில் ஆய்வாளராக இசக்கிராஜா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அப்பகுதியில் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

அமைச்சர் வீட்டில் குண்டு வீசயதில் கூலிப்படை ரவுடியான மட்டை மாடசாமி என்பவரை கைது செய்து மதுரை சிறப்பு படையினரிடம் ஒப்படைத்தார். பின்னர் மாடசாமி ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளிவந்த பிறகும் அவருடைய குற்றச்செயல்கள் குறையவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இசக்கிராஜா அவருடைய சொந்த கிராமத்திற்கு சென்றார்.

மாடசாமியின் சொந்த கிராமம் பாறைக்கூட்டம் என்ற கிராமமாகும். இந்த கிராமத்திற்கு இசக்கி ராஜா வரப்போவதை அறிந்து கொண்ட மட்டை மாடசாமி தலைமறைவானார். இசக்கி ராஜாவை மிரட்டும் துணியில் ஒரு ஆடியோவை வாட்ஸ்அப் மூலம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த ஆடியோவில், "1998-ஆம் ஆண்டில் உன் தந்தையை கொலை செய்தேன். அதற்காக நான் தண்டனையும் அனுபவித்துவிட்டேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.

நான் என் ஊருக்கு வரும்போது நீ எனக்கு பாதுகாப்பா இருந்தா மட்டும் தான் வருவேன். என்ன கொலை செய்வது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 2 கால வெட்டி நடக்க முடியாதவன் ஆக்கிடுவேன். நீ போட்டிருக்கிற டிரஸ்காக சும்மா விடுகிறேன். இது குடும்ப பகை. என்னிக்கு இருந்தாலும் இந்த குடும்ப பகைக்காக உன்னை வெட்டுவேன்" என்று மாடசாமி இசக்கிராஜாவுக்கு மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, இந்த ஆடியோ வானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்த ஆடியோவை க்கு பதிலளிக்கும் வகையில் இசக்கிராஜா மட்டை மாடசாமியிடம் உரையாடியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில் மட்டை மாடசாமி இசக்கி ராஜாவுக்கு பயந்து பேசியுள்ளார்.

அதாவது, "நீ பெரிய கூலிப்படையை வைத்து தொழில் செய்ற. உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ரெண்டு காலையும் நீ வெட்டிடுவே. ரொம்ப பயமா இருக்கு. தயவு செஞ்சு விட்டுவிடு. நான் எந்த ஆயுதமும் இல்லாமல் உன் இடத்துக்கு வரேன். முடிஞ்சா என்ன அரிவாளால் வெட்டிட்டு போங்க." என்று கலாய்க்கும் தொணியில் இசக்கிராஜா மாடசாமியிடம் பேசியுள்ளார்.

இசக்கிராஜாவின் பேச்சுக்கு மாடசாமி பயந்துவிட்டார். "இதற்கு முன்னால் வெளியான ஆடியோவில் பேசியது நானில்லை" என்று இசக்கிராஜா பம்மியுள்ளார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரவுடிகளின் வாட்ஸ்அப் குரூப்பில் புகுந்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்தவர் இசக்கிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.