கெட்டுப் போன சிக்கன் 65..! புதுக்கோட்டை இம்பாலா ஓட்டலுக்கு சென்ற பெண்களுக்கு கிடைத்த விபரீத அனுபவம்!

புதுக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் கெட்டுப்போன சிக்கன் 65 வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் எதிரே இம்பாலா எனும் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. அசைவ உணவிற்கு பெயர் போன இந்த உணவகத்தில் இருந்து பெண்கள் உள்ளிட்ட சிலர் சிக்கன் 65 பார்சலை வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளனர். வீட்டிற்கு வாங்கி சென்ற சிக்கன் 65 பார்சலை பிரித்து பார்த்தபோது சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து பார்சலை வீட்டுக்கு எடுத்து சென்ற பெண் உணவகத்தில் வந்து, எதற்காக கெட்டுப்போன சிக்கன் 65 பார்சல் செய்து தந்துள்ளீர்கள்? என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இதற்கு ஹோட்டல் நிர்வாகம் சரியான பதில் அளிக்காததால் அந்தப் பெண் உணவுத்துறை அதிகாரிகள் இடத்தில் தகவல் அளித்துள்ளார் . 

தகவலறிந்து வந்த உணவுத்துறை அதிகாரிகள் இம்பாலா உணவகத்தை சோதனையிட்டுள்ளனர். உணவு தரமாக சமைக்கப்படுகிறதா மற்றும் உணவு பொருட்கள் தரம் உள்ளதாக இருக்கின்றனவா எனவும் தீவிரமாக சோதனை மேற்கொண்டுள்ளனர் . இவ்வாறாக சோதனை செய்தபோது கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தியுள்ளனர் என்றும் அந்தப் பெண் வாங்கி சென்ற சிக்கன் 65 முந்தையநாள் சமைத்து என்றும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகத்தான் அந்த சிக்கன் 65-ல் இருந்து துர்நாற்றம் வீசிதையும் அவர்கள் கண்டுபிடித்தனர் . இதனை அடுத்து இம்பாலா உணவகத்தின் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 58 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.