குஜராத் பெண்கள் மட்டும் தான் டார்கெட்! பேஸ்புக் மூலம் இளைஞன் செய்த கேவலமான செயல்!

ஃபேஸ் புக் மூலம் பெண்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி வந்தவக்கிர நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ரியாஸ் ஆலம். கோரேகான் என்ற இடதில் வசிக்கும் 21 வயது குஜராத்திப் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நபரை கோரேகான் போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த நபர் குஜராத்திப் பெண்களையே தொடர்ந்து இலக்கு வைத்து ஆபாசப் படங்களைம், தரக்குறைவான தகவல்களையும் அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. புகார் அளித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நபருக்கு ஃபேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த நபர்  ஃபேஸ்புக்கில் ஆபாசப் படங்களையும், தகவல்களையும் அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 

ரியாஸ் ஆலமின் சொந்த ஊர் குஜராத் மாநிலம் புஜ் என்று விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் தற்போது மும்பையில் உள்ள ஜோகேஸ்வரியில் தங்கிக் கொண்டு ஆடைகள் விற்பனை மையம் ஒன்றில் வேலை பார்ப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவனது ஃபேஸ்புக் பக்கங்களை சோதனையிட்ட போது ஆபாசப் பட்ங்களும் தகவல்களும் சிக்கின. தொடர்ந்து குஜராத்தி பெண்களுக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பனாகும் ரியாஸ் அந்தப் பெண்கள் சிறிது பழகத் தொடங்கியதுமே அவர்களுக்கு ஆபாசப் படங்கள் தகவல்களை அனுப்பத் தொடங்கிவிடுவான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

அவனை கைது செய்த பின் அதே போன்றதொரு வழக்கு கடந்த மாதம் ஜோகேஸ்வரி காவல்  நிலையத்தில் பதிவாகியிருப்பதையும் அதில் தொடர்புடைய நபரும் ரியாஸ்தான் என்பதையும் கண்டுபிடித்தனர். ஆனால் கடந்த மாதம் பதிவான வழக்கில் குற்றவாளியான ரியாஸ் சிக்காத நிலையில் இன்னொரு வழக்கில் சிக்கிக் கொண்டுவிட்டான். இந்நிலையில் ஜோகேஸ்வரி போலீசாரும் ரியாசுக்கு காவல் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரியாஸ் மீது கோரேகான் போலீசார் பாலியல் அத்துமீறல், ஆபாசப் படங்களை அனுப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்  பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.