தென் கொரியாவில் ஓடும் ரத்த ஆறு..! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! அதிர வைக்கும் பின்னணி!

தென் கொரியா நாட்டில் பன்றிகளின் ரத்தம் ஆற்றில் கலந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக ஆசிய நாடுகளில் "ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல்" வேகமாக பரவி வருகிறது. இந்த நோயானது விலங்குகளிடையே மிகவும் விரைவாக பரவும் தன்மை படைத்தது. இந்த நோய் பாதித்த எந்த பன்றிகளும் உயிருடன் தப்பியதில்லை. ஆனால் இந்த நோய் மனிதர்களுக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. 

தென்கொரியாவில் இந்த ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் மிகவும் விரைவாக பரவிவருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட 47 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்தது. கொல்லப்பட்ட பன்றிகளை வடகொரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியில் பாய்ந்தோடும் இம்ஜின் ஆற்றங்கரையில் புதைத்தனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கடுமையான மழை பெய்து வந்தது. இதனால் மழைநீர் மண்ணில் கலந்து புதைக்கப்பட்ட பன்றிகளின் ரத்தம் வழிந்தோடியது. இது இம்ஜின் ஆற்றில் கலந்து, ஆறு ரத்த ஆறாக மாறியது. இதன்மூலம் இந்த நீரை உபயோகிக்கும் பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் தென்கொரிய அரசாங்கத்தினர், பன்றிகள் உடலிலிருந்து நோய் வெளியே எடுக்கப்பட்ட பின்புதான் புதைக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். எனினும் ரத்தமானது ஆற்றில் கலக்காமல் இருப்பதற்காக அவசரகால நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.