பிக்பாஸ் வீட்டில் இரவு லைட்டை அணைத்த பிறகு..! ரேஷ்மா வெளியிட்ட தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரேஷ்மா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.


விஜய் டிவியில் நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் தான் ரேஷ்மா.

நடிகை ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் , மேலும் அங்கு நடக்கின்றன சில சம்பவங்களைப் பற்றியும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் .

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் ஆனதற்கு பிறகு என்ன நடக்கும் ?  என்று தொகுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் . அதற்கு பதில் அளித்த நடிகை ரேஷ்மா , லைட் ஆஃப் ஆன பின்பு கவின் ,லாஸ் லியா ,சாக்ஷி , அபிராமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கொண்டு சிரித்துப் பேசி மகிழ்வார்கள் .

நானும் மற்ற போட்டியாளர்களும் வேலைகளை முடித்துவிட்டு  உறங்க சென்று விடுவோம் .ஆனால் ஒரு சிலர் ஒன்றாக அமர்ந்து கொண்டு சந்தோஷமாக பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்  என்று கூறினார்.