அண்ணனின் நண்பருடன் தகாத உறவு! ரகசியத்தை கண்டுபிடித்த கணவன்! கொன்று புதைத்த மனைவி!கிருஷ்ணகிரி திகுதிகு!

நண்பருடன் கள்ளக் காதல் இருந்ததை தெரிந்து கொண்ட கணவரை தீத்துக் கட்டிய மனைவி உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூரில் ஜவுளி வியாபாரி சஞ்சீவன்-அனிதா தம்பதி வாழ்ந்து வந்தனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் ஆகியோர் அண்ணணின் நண்பர்கள் என்ற அடிப்படையில் அனிதா தேவி பழகி வந்துள்ளார்.

ஜவுளி வியாபாரியான சஞ்சீவன் தனது குடும்பத்திற்கு உழைப்பதற்காகவும் தன்னை நம்பி வந்த மனைவியை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவும் சம்பாதிக்க பெரும்பாலும் வெளியூருக்கு சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார்.

சஞ்சீவன் வீட்டிற்கு அதிகம் வராத நிலையில் அனிதாதேவிக்கும் ஜெயப்பிரகாஷுக்கும் இருந்த நட்பு படிப்படியாக முறையற்ற உறவுக்கு கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து கணவர் ஊரில் இல்லாத போதெல்லாம் இன்னொரு கணவன் போல் ஜெயப்பிரகாஷுடன் கள்ளக் காதலை வளர்த்துள்ளார் அனிதா தேவி.

இவர்கள் இருவரும் முறையற்ற வாழ்வு வாழ்வதை அனிதாதேவியின் கணவர் சஞ்சீவன் ஒரு நாள் கண்டுபிடித்துவிட்டார். இதனால் அச்சமடைந்த அனிதா தேவி எங்கே உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி அவமானப் படுத்தி விடுவாரோ என பயந்து அவரை பரலோகத்துக்கு அனுப்ப முடிவு செய்தார்.

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் கணவர் உயிரோடு இருக்கக் கூடாது என ஜெயப்பிரகாஷிடம் தெரிவித்துள்ளார் அனிதா தேவி. இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனிதா தேவி, ஜெயப்பிரகாஷ் மற்றும் சங்கர் ஆகியோர் சதி திட்டம் தீட்டினர். மனைவி ஒன்றே உலகம், பாதுகாப்பு என நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த சஞ்சீவனை 3 பேரும் சேர்ந்து தலையணை வைத்து அழுத்தியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை ஏரியில் அரைகுறையாக புதைத்து விட்டு வந்தனர். அங்கிருந்த கிராமவாசிகள் கொடுத்த தகவலின் பேரில் சஞ்சீவனின் உடல் மீட்கப்பட்டு குற்றவாளிகளான அனிதா தேவி, ஜெயப்பிரகாஷ், சங்கர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனிதா தேவி, ஜெயப்பிரகாஷ், சதீஷ் ஆகியோருக்கு கொலைக் குற்றம், கூட்டுச்சதி ஆகியவற்றிற்கு இரட்டை ஆயுள்தண்டனையும், தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டு சிறைதண்டனையும் வழங்கி தீர்ப்பு அளித்தது.

மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.நெறி தவறிய உறவு மூலம் 3 பேரின் குடும்பம் சின்னா பின்னமாகி உள்ளது. அனிதா தேவி செய்த தவறு ஜெயப்பிரகாஷ், சங்கர் ஆகியோரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.