திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்!

மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகினார் ரவி சாஸ்திரி .


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராண  ரவி சாஸ்திரியின் பதவி காலம் வரும் 2021 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விராட் கோலியின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு CAC சார்பில் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்க வேண்டி அறிவு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை ஒட்டி உலக நாடுகளில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர்.நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி போன்றோரும் பட்டியலில் முதன்மை வகித்து வந்தனர். 

இந்நிலையில் CAC -ன் அதிகாரிகளான அனுஷ்மண் மற்றும் சாந்தா ரங்கசாமி  ஆகியோர் இவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேர்காணலை  நடத்தினர். ஆனால் இதன்  இறுதி முடிவில் மீண்டும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். 

முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இந்த முடிவு பற்றி பேசும்போது தலைமை பயிற்சியாளர் பதவிக்காக  நடத்தப்பட்ட நேர்காணலில் ரவி சாஸ்திரி தான் முன்னிலை வகித்தார் . இவரை தொடர்ந்து  ஹஸன்  மற்றும் டாம் மூடி  ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர் என்று கூறினார்.

ஆனால் இந்த நேர்காணலில் ரவிசாஸ்திரி நேரடியாக பங்கேற்கவில்லை . இவர் தற்போது இந்திய அணியுடன் மேற்கிந்திய தீவிற்கு சென்று உள்ளார். ஆகையால் ஸ்கைப் மூலமாக வீடியோ கால்  செய்து தன்னுடைய  நேர்காணலில் பங்கேற்றார். 

மேலும் கபில்தேவ் பேசுகையில் ரவிசாஸ்திரி இந்திய அணியை நன்றாக புரிந்து வைத்துள்ளார். எவரொருவர் அணியை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாரோ அவரால்தான் நன்றாக பயிற்சியை அளிக்க இயலும் என்று கூறினார்.

 ரவி சாஸ்திரி கடந்த 2016ஆம் ஆண்டுவரை  இந்திய கிரிக்கெட் அணியின் டைரக்டராக  செயல்பட்டார்  சமீபத்தில் நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் 45 நாட்கள்  ரவி சாஸ்திரி அவர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி இதுவரை 150 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி உள்ளது. மேலும் 80 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளது. சிறந்த கிரிக்கெட் வீரரான ரவிசாஸ்திரி தன்னுடைய காலில்  அடிபட்டதால் தன்னுடைய 30 வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

இவர் இது இதுவரை 3108 ரன்களையும் 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.90களில் தன்னுடைய ஓய்வுக்காலம் ஆரம்பித்தவுடன் சாஸ்திரி கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக கடந்த 2014 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் .