கட்டிப்பிடித்தார்! முத்தம் கொடுத்தார்! வயிற்றை தொட்டார்! கர்ப்பிணி ரசிகையிடம் திருமணமான நடிகர் நடந்து கொண்ட விதத்தால் சர்ச்சை!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர்சிங் தன்னுடைய ரசிகர் ஒருவரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார் .


நடிகர் ரன்வீர் சிங் தன்னுடைய 83ஆவது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது . இந்த பிஸியான சூழ்நிலையிலும் ரன்வீர் சிங் தன்னுடைய மிகப்பெரிய ரசிகை ஒருவரை சந்திப்பதற்காக தன்னுடைய ஷூட்டிங்கை சற்று முன்னதாக முடித்துக் கொண்டு சென்றுள்ளார்.

லண்டனை சேர்ந்த கிரண் என்ற பெண்மணி ரன்வீர் சிங் அவர்களின் தீவிர ரசிகை ஆவார். ரன்வீர் சிங் எப்போது லண்டன் வந்தாலும் அவரை பார்ப்பதே  கீரனின் முதல் பணியாக இருந்தது.

ஆனால் தற்போது கிரண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை அறிந்த ரன்வீர்சிங்    தன்னுடைய ரசிகையை   பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஷூட்டிங்கை விரைவாக முடித்து கொண்டு அவரது இல்லத்தை  நோக்கி சென்றுள்ளார் . அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரசிகை இல்லத்திற்கு   சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்ற நிலையில் அங்கிருந்து கிளம்பி தன் ரசிகையின் வீட்டிற்கு   சென்று அடைந்துள்ளார்.

அங்கே அவரைப் பார்த்த ரன்வீர்சிங் அவர்களின் ரசிகை மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளார். செய்வதறியாது என்ன செய்வது என்று தெரியாமல் ஆனந்தக் கண்ணீரை சிந்தினார் கிரண் . கிரன் வீட்டில் ரன்வீர்சிங் சுமார் 1.5 மணிநேரம் இருந்துள்ளார். அதாவது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரை வாழ்வதற்காகவே அவர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரன்வீர்சிங்.

இந்த சம்பவத்தை கிரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் ரன்வீர்சிங் வந்த போது தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்பதை மிக அழகாக அதில் குறிப்பிட்டிருந்தார். ரன்வீர்சிங் என் இல்லத்திற்கு வந்து என்னால் நம்பவே முடியவில்லை . அவர் வந்த அந்த தருணம் எனக்கு மறக்கவே முடியாத அனுபவத்தை தந்தது .

மேலும் அவர் என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார், என்னுடைய வயிற்றை தடவி என் குழந்தை ஆசீர்வதித்து சென்றார் என்பது மிகவும் சந்தோஷத்துக்கு உரிய ஒன்றாகும் என்று அந்த பதிவில் வெளியிட்டு இருந்தார். ரன்வீர் சிங்கின் இந்த செயலை அறிந்து அவரது ரசிகர்கள் அவரை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம் கர்ப்பிணி பெண் ஒருவரை எப்படி வயிற்றில் நடிகர் தடவலாம், மேலும் எப்படி முத்தமிடலாம்? ரன்வீர் சிங் திருமணமான நபர் தானே இது கூட தெரியாதா என்று சிலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அதே சமயம் அந்த பெண் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.