18 ஆண்டுகளாக குழந்தை இல்லை! கணவனை மடியில் படுக்க வைத்து விஷம் கொடுத்த மனைவி! பதற வைக்கும் காரணம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் உணவில் விஷத்தை வைத்து தன் கணவனுக்கு ஊட்டிவிட்டுள்ளார். அதை அறியாமல் உணவை சாப்பிட்ட கணவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி இவருக்கும் பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை பேறு இல்லாததால் அவரது மனைவி பஞ்சவர்ணம் மிகுந்த ஏக்கத்தில் இறுந்துள்ளார். இதனாலேயே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அடிக்கடி கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விசேஷங்களுக்கு சென்று வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவரின் ஊரில் திருவிழா நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரையும் அவரது உறவினர்கள் திருவிழாவுக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சவர்ணம் கணவரின் ஊருக்கு வர மறுத்துள்ளார். இதையடுத்து அனைவரும் கேட்டுக் கொண்ட நிலையில் பஞ்சவர்ணம் தனது கணவருடன் ஊருக்கு வர ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஊருக்கு சென்று திருவிழாவில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவழியாக வீடு திரும்பியவர்கள் ராமசாமியின் சகோதரர் கணேசன் என்பவரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சில நாட்கள் நன்றாக சென்ற நிலையில் திரும்பவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது. இந்நிலையில் பஞ்சவர்ணம் தனது கணவனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என எண்ணியுள்ளார்.இதனால் தன் கணவர் சாப்பிடும் சாப்பாட்டில் எளிமையை வைத்து தனது கணவருக்கும் ஊட்டியுள்ளார். இந்நிலையில் எதையும் அறியாத ராமசாமி அதை உண்டு அரை மயக்க நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். 

 இந்நிலையில் பஞ்சவர்ணம் உடனே அவரது சகோதரர் கணேசன் வீட்டிற்கு ஓடிச் சென்று நான் என் கணவருக்கு சாப்பாட்டில் எலி மருந்தை வைத்து கொடுத்துவிட்டேன். அவர் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் உடனே வீட்டிற்கு சென்று ராமசாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் இதுகுறித்து காவல்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பஞ்சவர்ணத்தை கைதுசெய்துள்ளனர். மற்றும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் ராமசாமி நலமுடன் இருப்பதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.