அர்ஜுன மூர்த்திக்கு நச்சென்று குத்து விட்ட ரஜினிகாந்த்...

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்த பிறகும், ரஜினி ரசிகர்களை ஒன்றிணைத்து நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று உதார் விட்டுக்கொண்டு இருந்தார் அர்ஜுனமூர்த்தி. அவருக்கு லதா ரஜினிகாந்த் ஆதரவு இருப்பதாகவும் ஒரு செய்தி ஓடியது.


இந்த நிலையில் இன்று திடீரென அர்ஜுன மூர்த்தியின் செயலுக்கு நச்சென்று ஒரு முடிவுரை எழுதியிருக்கிறார் ரஜினிகாந்த். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை" என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு சுதாகர் தொலை பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அர்ஜூன மூர்த்தி கட்சி தொடங்கினால் நமக்கும் அவருக்கும் சம்மந்தம் கிடையாது என்றும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

என்ன செய்யப்போகிறார் அர்ஜுன மூர்த்தி என்பதுதான் இப்போது ஒரே கேள்வி. மீண்டும் காவியில் போய் சங்கமமாகுங்க மூர்த்தி.