சூப்பர் ஸ்டார் - சிறுத்தை சிவா - சன் பிக்சர்ஸ்! உருவாகிறது பிரமாண்ட திரைப்படம்! விரைவில் அறிவிப்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் ,இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .


சிறுத்தை சிவா கடைசியாக இயக்கிய விசுவாசம் திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விசுவாசம் திரைப்படத்தின் மூலம்  இயக்குனர் சிறுத்தை சிவா பேமிலி ஆடியன்சை  தன் வசம் ஆக்கினார்.

இந்நிலையில் சிறுத்தை சிவாவிற்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த புதிய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . 

தற்போதைய A.R.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் .இந்த இது திரைப்படம் வெளி வந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 

இயக்குனர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டாரை வைத்து கமர்சியல் ஆக்சன் படம் எடுக்கப் போகிறாரா அல்லது ஃபேமிலி சென்டிமென்ட் எடுக்கப் போகிறாரா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது .