மக்களின் நலனுக்காக இணையத் தயார்! ரஜனி-கமல் பக்கா பிளான்! தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கமலுடன் இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக கமலுடன் இனையும் சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக இணைந்து செயல்படுவோம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக நடிகர் கமலும் மக்களின் நலனுக்காக ரஜினிகாந்துடன் இணையும் சூழல் ஏற்பட்டால் இணையத் தயார் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினி மற்றும் கமல் இந்த கருத்தானது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நடிகர் கமல் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் முடிவடைந்ததை ஒட்டி உங்கள் நாள் எனும் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டரங்கில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பங்கு பெற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் நிகழும் என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்திற்கு அதிமுகவிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.