சவுக்கு சங்கர் ரெய்டில் ஆபாச வீடியோ

சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவுக்கு வந்தது. இந்த சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.


தி.மு.க.வை ஒழித்துக் கட்டிவிடுவேன் என்று சவால் விட்டவர் சவுக்கு சங்கர். பெண் காவலர்களை இழிவு படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கில் எசகுபிசகான விஷயங்கள் இருப்பதாக செய்திகள் கசிகின்றன.

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவுக்கு வந்தது. இந்த சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இந்த ஹார்ட் டிஸ்கில் பல்வேறு நபர்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவுகிறது. இது மட்டுமின்றி, கடந்த இரண்டு வருட காலத்தில் மட்டும் மார்க்கெட் மதிப்பில் சுமார் 30 கோடி ருபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதவிர, பல்வேறு நபர்களுக்கு லட்சக்கணக்கில் மாதா மாதம் பணம் வழங்கப்பட்டிருக்கிறது. அத்தனையும் ஆதாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து இத்தனை காலமும் சவுக்கு சங்கருக்கு ஆதரவு கொடுத்த முக்கிய நபர்கள் அமைதியாகியிருக்கிறார்கள்.