விராட் கோலி, ரஹானே பொறுப்பான ஆட்டம்! முதல் டெஸ்டில் வெற்றியை நோக்கி இந்திய அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை தனது இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்துள்ளது .


இதன் மூலம் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக நேற்றைய ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சை  தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் 75 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது .

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை ஆட்டநேர முடிவில் எடுத்தது.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 51 ரன்களுடனும் ரஹானே 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.