கொரோனா நிவாரணம் ரூ.3 கோடி..! அஜித்தை தூக்கி அடித்த ராகவா லாரன்ஸ்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளார்.


உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் கடந்த சில நாட்களாகவே அதி வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 800 க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் கொரோனா மருத்துவ உதவி மற்றும் தடுப்பு பணிகளுக்கு கடந்த சில நாட்களாகவே பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் 1.25 கோடி ரூபாய் நிதியை அளித்து இருந்தார். இந்நிலையில் பிரபல நடன இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

அதன்படி ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாயை பிரதமர் பொது நிவாரண நிதிக்காகவும், 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகவும், பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் ரூபாயும், டான்ஸ் யூனியனுக்கு 50 லட்சம் ரூபாயும், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 லட்சம் ரூபாயும் , தினக்கூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் ரூபாயும் அளித்து ராகவா லாரன்ஸ் அசத்தியுள்ளார்.