சித்தி - 2க்கு வந்த மோசமான சோதனை..! ராதிகாவுக்கா இப்படி ஒரு சோகமான நிலைமை? அதிர்ச்சியில் சன் டிவி!

சமீபத்தில் வெளியாகிய சித்தி 2 சீரியல் இந்த வாரம் டிஆர்பி யில் சரிவை சந்தித்து உள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.


பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கியவர் நடிகை ராதிகா ஆவார். கடந்த சில காலங்களாகவே திரைஉலகில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் நடிகை ராதிகா தற்போது மீண்டும் சின்னத்திரையில் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த சித்தி சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதனால் சீரியல் உலகில் புகழின் உச்சிக்கு சென்றார் அதிகம் என்றால் அது மிகையாகாது. மேலும் பல்வேறு சீரியல்களில் நடித்து டிஆர்பி யில் முதலிடத்தில் ராதிகா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடைசியாக ராதிகா நடிப்பில் வெளியான ஒரு சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாததால் மற்றும் டிஆர்பி யில் பெரிய ரீச் இல்லாததாலும் அந்த சீரியலை அவர் நிறுத்திவிட்டார். பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த புகழ் மூலம் மீண்டும் சித்தி 2 சீரியலில் நடிக்கத் தொடங்கி மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

முதல் வாரம் டி ஆர் பி இல் டாப் 5ல் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் டாப் 5யை விட்டு பின்னுக்கு சென்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.