5 ஓவர் IPL போட்டி! சரவெடியாக வெடித்த கோஹ்லி! மழை குறிக்கிட்டதால் கோஹ்லி அணிக்கு நடந்த சோகம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ipl போட்டி மழை காரணமாக ட்ராவில் முடிந்தது.


ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ipl போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று அங்கு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை விட்டவுடன் ஆட்டம் 5 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது. பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 62 ரன்களை எடுத்தது. விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 25 ரன்களை விளாசினார்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.2 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்த நிலையில் மீண்டும் மழை குறிக்கிட்டது. மேலும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாமல் நடுவர்கள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் கடைசி வாய்பையும் இழந்து ipl தொடரிலிருந்து வெளியேறியது.