உதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்

அடுத்த ஆட்சி தி.மு.க.தான் என்ற மிதப்பு இப்போதே தி.மு.க.வினருக்கு வந்துவிட்டது. இப்படித்தான் கடந்த தேர்தலில் கோட்டைவிட்டனர். அதேபோன்று இப்போதும் ஆகிவிடக் கூடாது என்று கூட்டணிகள் அலறுகிறார்கள். காரணம் உதயநிதியின் ஓவர் பேச்சுதான்.


தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் சசிகலா பற்றி அண்மையில் உதயநிதி வெளியிட்ட ஆபாச கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவிக்க, கடைசியில் வேறு வழியில்லாமல் வருத்தம் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வழக்கு தொடரப்போவதாக நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள் அடுத்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் உதயநிதி. ‘’ வரும் தேர்தலில் திமுக 234 தொகுதிகளில் போட்டியிட்டால் அத்தனை தொகுதிகளிலும் வெற்றிபெறும். எனவே திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது. இது பற்றி தலைவரிடம் நான் கூறியிருக்கிறேன்’’ என அவர் நீட்டி முழங்கியிருப்பது கூட்டணி கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.

இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் தரப்பில் விசாரித்தபோது,’’ வெண்ணை திரளும் நேரத்தில் தாளியை உடைத்த மாதிரி இருக்கிறது திமுகவினரின் செயல்பாடுகள். அதிலும் குறிப்பாக உதயநிதியின் பேச்சுக்கள் கூட்டணி கட்சியினரை ரொம்பவே கொதிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன. 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெறும் என்றால் எதற்காக கூட்டணி ? கூட்டணி தேவையில்லை என அறிவிக்கும் தைரியம் திமுகவிற்கு இருக்கிறதா? எனவே மகன் என்று பாராமல் உதயநிதிக்கு ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்’’ என்று டென்ஷன் ஆகியுள்ளனர்.

ஸ்டாலினால் உதயநிதியை தடுத்து நிறுத்தமுடியுமா என்ன..?