21 வயது மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு! எப்போதும் செல்போன் பேச்சு! முதலாம் ஆண்டு கல்யாண நாளில் கணவன் எடுத்த பகீர் முடிவு!

திருமண நாளன்று பரிசு தரவில்லை என கேட்டதால் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட துரதிர்ஷ்ட சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.


பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பைசன், ஷப் நகூர் தம்பதி வசித்து வந்தனர். மனைவிக்கு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகியும் பல நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் சைவம் அதிகமாக சாப்பிடும் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஷக்நகூர் அசைவ உணவு வேண்டும் என கணவரிடம் தொல்லையிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது. அப்போது ஷப் நகூர் பரிசு எதுவும் வாங்கித் தரவில்லையா என கேட்டுள்ளார். இதனால் கணவன் , மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கணவர் செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் ரயிலில் சென்றுகொண்டிருந்த பைசன் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதனாலேயே இப்படி ஒரு விபரீத சம்பவம் நடைபெற்றதாகவும் பைசனின் தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.