அமமுக வில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்தார் புகழேந்தி!

நேற்றைய தினம் புகழேந்தி அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் புகழேந்தி, அமமுக கட்சியை சார்ந்த டிடிவி தினகரனை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


புகழேந்தி, டிடிவி தினகரனின் நெருங்கிய ஆதரவாளராக திகழ்ந்தவர். சமீபகாலமாகவே புகழேந்திரக்கும் டிடிவி தினகரனுக்கும் தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் உள்ளன. ஆகையால் தொடர்ச்சியாக டிடிவி தினகரனை பற்றி புகழேந்தி கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். டிடிவி தினகரனுக்கும் புகழேந்திக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது கட்சியிலும் பிரதிபலித்துள்ளது.

அதாவது புகழேந்தி அமமுக கட்சியிலிருந்து விலகி உள்ளார். அதுமட்டுமில்லாமல் நேற்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில்  அக்கட்சியில் இணைந்து இருக்கிறார் .

 புகழேந்தி புதியதாக அதிமுகவில் இணைந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் இதுவரை நான் கூவத்தில் வாழ்ந்து வந்தேன், இனிமேல் என்னால் அந்த நாற்றத்தில் இருக்க முடியாது அதனால் தான் அங்கிருந்து விலகி விட்டேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் ஒருபோதும் அமமுக கட்சியை 3வது பெரிய கட்சியாக தினகரனால் மாற்ற இயலாது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் தினகரன் கட்சி பணத்தில் பல முறைகேடுகளை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.