ரெட் லைட் ஏரியாவான ராமநாதபுரம் பேருந்து நிலையம்! இரவில் அரங்கேறும் தகாத செயல்கள்! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பேருந்து நிலைய பயணிகள் ஓய்வறையை சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்துவதாக நகராட்சி ஆணையர் ஒப்பு கொண்டுள்ள ஆடியோவானது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மாவட்ட தலைநகராக ராமநாதபுரம் விளங்குகிறது. இங்குள்ள அரசு பேருந்து பணிமனையில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது சில சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் பயணிகள் அமர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இருக்கைகளை கடைக்காரர்கள் தங்களுடைய உபயோகத்திற்கு பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகாரளிக்கின்றனர். 

புறக்காவல் நிலையத்துக்கு அருகே பயணிகள் ஓய்வு அறை என்ற இடமுள்ளது. இதனை சட்டவிரோதமாக தனியார் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த குற்றச்சாட்டை பற்றி நகராட்சி ஆணையர் பேசியதாக வெளியாகிய வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கூறுகையில், "பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓய்வு அறையில் இரவு நேரங்களில் தகாத செயல்கள் அரங்கேறி வருகின்றன. மது கூடமாகவும், சில நேரங்களில் விபச்சார விடுதியாகவும் இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை தடுக்கவே இந்தப் பயணிகள் ஓய்வறையை தனியாருக்கு நான் வாடகைக்கு விட்டுள்ளேன்" என்று கூறினார்.

இந்த ஆடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அதாவது ஆடியோவை பரிசீலித்து பயணிகளின் ஓய்வறையில் தனியாரிடமிருந்து கைப்பற்றி மீண்டும் பொது மக்களுக்கு அளிக்க முயற்சி எடுக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது ராமநாதபுர மாநகராட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.