கொரானாவுக்கு இது தான் மருந்து..! மாட்டு கோமியத்தை மடக் மடக் என குடிக்கும் மக்கள்..! எங்கு தெரியுமா?

கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் பலர் கோமியத்தை குடித்த புகைப்படங்களாவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 4400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நோயில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக சென்ற வாரம் அகில இந்திய இந்து யூனியன் கோமிய விருந்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விரும்பி பீங்கான் கோப்பைகளிலும், காகித கோப்பைகளிலும் சிறுநீர் பருகியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் பல வருடங்களாக கோமியத்தை பருகி வருகிறோம். 200க்கும் மேற்பட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிராக கோமியம் செயல்படுகிறது. ஆங்கில மருத்துவ முறையின் தேவைகளை நாங்கள் உணரவில்லை" என்று கூறியுள்ளனர். அதேபோன்று இந்த விழாவில் கலந்து கொண்ட "அகில இந்து இந்திய முண்ணனி" கட்சி தலைவர் சக்ரபாணி மகாராஜ், கோமியம் நிறைந்த பீங்கான் கோப்பையில் வைரஸின் சித்திரத்தின் முன் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கோமியத்தை மருந்துப் பொருளாக அறிவிப்பதற்காக விவாதம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.