சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நள்ளிரவில் நடைபெற்ற போராட்டம்.. போலீசார் தடியடி..!

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தை கலைக்கும் நோக்கில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடெங்கிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன . அதிலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம் , மணிப்பூர் போன்ற இடங்களிலும் மிகப் பெரிய வன்முறை போராட்டங்களும் நிகழ்ந்தது இருப்பினும் அந்த குடியுரிமை மசோதாவை அரசு திரும்பப் பெறவில்லை.

இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பகல் 2 மணி அளவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் நேரம் செல்ல செல்ல மிகப்பெரிய ஒன்றாக மாறியது. போராட்டக்காரர்களை போலீசாரால் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உருவானது.

இதனால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த துவங்கினர். சுமார் 5 மணி நேரத்தையும் கடந்து நள்ளிரவு வரை நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினர்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் யாருமே காவல்துறை அதிகாரிகளின் வார்த்தைகளை கேட்க தயாராக இல்லாத காரணத்தால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்து அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் போராட்டக்காரர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசத் துவங்கினர். இதனை அடுத்து காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரர்களின் தலைவரை நேரில் சந்தித்து பேசினார். இருப்பினும் போராட்டத்தால் கட்டிக் கொண்டு வர இயலவில்லை.

போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிராக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் போராட்டம் வலுத்து வருகிறது.