விஜயை வைத்து படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் -பார்ட் 2!

மதுர படத்தில் தொடங்கி போக்கிரி வரை நடிகர் விஜயை வைத்து படம் எடுத்து படாதபாடு பட்ட தயாரிப்பாளர்களை ஏற்கனவே பார்த்திருந்தோர். தற்போது அடுத்தடுத்து விஜயை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை பார்க்கலாம்.


அழகிய தமிழ் மகன் விஜய் கேரியரில் தோல்விப்படங்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடித்துள்ள படம் இது. இந்த படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் பிரமிட் நடராஜன் எடுத்திருந்தார். அதன் பிறகு அவர் வேறு படங்களை தயாரிக்கவே இல்லை.

காரணம் அழகிய தமிழ் மகன் படத்திற்கு வாங்கிய பைனான்சை வட்டியுடன் கட்டவே பிரமிட் நடராஜனுக்கு பல ஆண்டுகள் ஆனது.  இதன் மூலம் மேலும் ஒரு தயாரிப்பாளரை திரையுலகை விட்டு விரட்டிய பெருமை விஜய்க்கு சேரும். அடுத்தடுத்து விஜய் படங்கள் தயாரிப்பாளர்கள் வாழ்வில் நிகழ்த்திய சோகங்கள் ஏராளம் இருக்கின்றன.

வில்லு. லண்டனில் தமிழ் படங்களின் உரிமைகளை வாங்கி சி.டி விற்பனை செய்து கொண்டிருந்த நிறுவனம் ஐங்கரன். நல்ல லாபம் பார்த்த ஐங்கரன் தமிழில் படம் தயாரிக்கும் ஆசையுடன் சென்னை வந்தது. நடிகர் விஜயை வைத்து வில்லு என்கிற படத்தை எடுத்து வெளியிட்டது ஐங்கரன். படம் வெளியாகி படு தோல்வி.

இதனால் ஐங்கரன் நிறுவனம் அப்போது ஒரே நேரத்தில் தயாரித்து வந்த அங்காடித் தெரு, களவாடிய பொழுதுகள், எந்திரன் என அனைத்து படங்களும் நிறுத்தப்பட்டன.  எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது. பிறகு அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களை மிகவும் சிரமப்பட்டு ஐங்கரன் வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு புதிய படங்கள் எதையும் ஐங்கரன் தயாரிக்கவில்லை.

  வில்லு படத்தில் கிடைத்த மரண அடிக்கு பிறகு தமிழ்திரையுலகின் பக்கம் ஐங்கரன் திரும்பி பார்க்கவில்லை. லண்டனை சேர்ந்த ஒருநிறுவனத்தை தலைதெறிக்க ஓட வைத்த பெருமையும் விஜயின் வில்லு படத்திற்கு சேரும். பிறகு பலரும் முயன்று எப்படியாவது ஐங்கரனை மீண்டும் தமிழகம் அழைத்து வர முயற்சித்தார்கள். ஆனால் ஐங்கரன் கடைசி வரை வரவே இல்லை. தேங்ஸ் டு விஜய்.

வேலாயுதம். ஆஸ்கர் பிலிம்ஸ். 2000ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து நிறைய தமிழ் படங்களை தயாரித்து வந்த நிறுவம். விஜய், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் பலரும் ஆஸ்கர் பிலிம்ஸ் படங்களில் நடித்தவர்கள். மிகவும் பிரபலமாக விளங்கிய ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது திரைப்பட தயாரிப்பை நிறுத்திவிட்டது. இதற்கு காரணம் நடிகர் விஜயே தான். விஜயை வைத்து வேலாயுதம் என்கிற படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் எடுத்தது.

படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய ஆஸ்கர் பிலிம்ஸ், அப்போது எடுத்துக் கொண்டிருந்த பல படங்களை வெளியிட முடியாமல் தவித்தது. பின்னர் ஒவ்வொரு படமாக வெளியிட்ட நிலையில் வேலாயுதம் கொடுத்த நஷ்டத்தால் தற்போது ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தயாரிப்பை நிறுத்திவிட்டது.

விஜயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலில் இரண்டு பார்ட் தான் முடிந்துள்ளது. மேலும் இரண்டு பார்ட்டுகள் இருக்கின்றன. அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம். அந்த பார்ட்டில் விஜயால் இந்த தயாரிப்பாளர்கள் எல்லாமுமா ரோட்டுக்கு வந்துள்ளார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் முதல் பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 3வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 4வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.