விஜயை வைத்து படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் -பார்ட் 1!

நடிகர் விஜயை அவரது ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் வசூல் மன்னன் என்று வர்ணித்து வரும் நிலையில் அவரை வைத்து படம் எடுத்த பாதிக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தற்போது திரைப்படம் எடுப்பதையே விட்டுவிட்டு ஓடியுள்ளது தகவல் தெரியவந்துள்ளது.


அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் மாபெரும் வெற்றி என்றும், 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் என்று தகவல்கள் பரவின. இது உண்மையா, உண்மையில் விஜய் படத்திற்கு இவ்வளவு வசூல் கிடைத்ததா என்பதை அறிய திரையுலக பிரபலங்கள் சிலரை சந்தித்து பேசினோம். அப்போது அவர்கள் கூறிய சில தகவல்கள் அதிர வைப்பதாக இருந்தது.

அதாவது நடிகர் விஜயை வைத்து கடந்த 15 வருடங்களாக திரைப்படம் எடுத்து மீள முடியாத அளவிற்கு நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்களின் பட்டியலை அவர்கள் கொடுத்தனர். அதில் சில தயாரிப்பாளர்கள் விஜய் படத்திற்கு செய்த செலவை கூட எடுக்க முடியாமல், தற்போதும் கடனில் மூழ்கி தவித்து வருவது தெரியவந்துள்ளது. அப்படி விஜய் நடிப்பில் உருவான படங்களில் தயாரிப்பாளர்களை காலி செய்த படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

மதுர. இந்த படத்தை மூவி மேஜிக் எனும் நிறுவனத்தை தொடங்கி மாதேஷ் என்பவர் தயாரித்து இயக்கினார். அவர் தயாரித்து மற்றும் இயக்கிய முதலும் கடைசியுமான படம் இது தான். இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த மாதேஷ் விஜய் கால்ஷீட்டை வாங்கி படம் பண்ணினால் கோடிகளை அள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் படம் வெளியாகி கையை கடித்தது மட்டும் இல்லாமல் கட காரராகவும் ஆனார் மாதேஷ்.   

இதனால் அதன் பிறகு சில ஆண்டுகள் திரையுலகை விட்டே ஒதுங்கினார். பிறகு மெல்ல மெல்ல மீண்டும் வந்த அவர் வினயை வைத்து ஒரு படம் எடுத்தார். அதுவும் சரியாக போகதா நிலையில் தற்போது கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறார் மாதேஷ். கடந்த 15 ஆண்டுகளில் விஜயை வைத்து படம் எடுத்து முதன் முதலில் பாதிக்கப்பட்டவர் மாதேஷ் என்று கூறலாம்.

ஆதி. ரமணா இயக்கத்தில் ஆதி என்கிற படத்தை தனது மகன் விஜயை வைத்து எடுத்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். படம் சூர மொக்கை என்பதுடன் விநியோகஸ்தர்களுக்கு செம இழப்பு. இழப்பை ஈடுகட்டச் சொல்லி நடிகர் விஜயை மிரட்டி விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றனர். இதனால் ஆதி மூலம் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பெருத்த நஷ்டம். அதன் பிறகு சொந்த மகனாக இருந்தாலும் கூட சந்திரசேகர் தனது மகனை வைத்து படம் எடுத்ததே இல்லை. இதன் மூலமே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் விஜயின் மார்க்கெட் வேல்யுவை.

போக்கிரி. என்னது போக்கிரி தோல்விப்படமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படம் வெற்றிப் படம் தான். யாருக்கு? நடிகர் விஜய்க்கும், விநியோகஸ்தர்களுக்கும். ஆனால் படத்தை தயாரித்த கனகரத்னா மூவிஸ் நிறுவனம் அதன் பிறகு திரையுலகம் இருக்கும் பக்கத்தைகூட திரும்பி பார்ப்பது இல்லை. மாபெரும் வெற்றிப் படத்தை எடுத்த ஒரு தயாரிப்பாளர் அடுத்து படம் எடுக்காமல் எப்படி இருப்பார்?     இதன் மூலமே போக்கிரி மூலமாக அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளலாம்.

இத்தோடு இந்த பட்டியல் முடியவில்லை. நடிகர் விஜய் மேலும் நிறைய தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளையாடியுள்ளார். அதனை அடுத்தடுத்த பாகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 2வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 3வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 4வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.