என் தொப்புளில் ஆம்ப்லேட் போட்டு கேட்டார் அவர்! பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம்!

தயாரிப்பாளர் ஒருவர் என் தொப்புளில் ஆம்ப்லேட் போட்டு கேட்டார் என்று பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹிஸ், டர்டி பாலிடிக்ஸ், மர்டர் ஆகிய படங்களில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். இவருக்கு சமீப காலங்களில் அந்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை. தற்போது "பூ" என்ற காமெடி இல்லை சீரிஸில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கபில் ஷர்மா ஷோவில் அளித்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "நான் மிகவும் வெளிப்படையாக பேசுவேன். அதனால் நிறைய பேருக்கு சங்கடம் ஏற்படுகிறது. நிறைய நடிகர்கள் தற்போது தங்கள் காதலிகளை படத்தில் நடிக்க வைக்கின்றனர். ஆனால் நான் அதற்காகலாம் கவலைப்பட மாட்டேன். தற்போது திரும்பி பார்க்கும்போது அவர்கள் அனைவரும் பைத்தியமாகவே எனக்குத் தெரிகின்றனர்" என்று கூறினார். 

மேலும் எந்த அளவிற்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தன்னை கிளாமராக நடிக்க வைக்க எண்ணுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுடன் கூறினார். "ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் புதிதானவர். படத்தின் கோரியோகிராபரிடம் தன்னுடைய எண்ணத்தை தெரிவித்தார்.

அதாவது,"நான் ஹாட்டாக இருப்பதால் என்னுடைய வயிற்றில் முட்டையை வறுப்பது போன்ற காட்சியை படமாக்க வேண்டும் என்று கூறினார்".  அதாவது தொப்புளில் ஆம்ப்லேட் போட வேண்டும் என்று கூறினார். அதிர்ந்த கபில் ஷர்மா அவ்வாறு செய்தீர்களா என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே இல்லை என்று பதிலளித்தார்.

இந்தப் பேட்டியானது  சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.