எடியூரப்பாவுக்கு எட்டு திசையிலும் அடியப்பா?

குமாரசாமி - காங்கிரஸ் கூட்டணியை கோடிகளைக் கொட்டி கவிழ்த்தும் எடியூரப்பாவுக்கு நிம்மதியில்லை.அவர் மட்டும் முதல்வர் பதவியேற்று இரண்டு வாரகால ஒரு நபர் அரசாக இருந்தார்.


மந்திரிசபை லிஸ்டோடு டெல்லிக்கும் பெங்களூருக்குக் பலதடவை பறந்து ஒரு 17 பேர் கொண்ட லிஸ்ட்டை இறுதி செய்து அறிவித்தார்.ஆனால் அதிலும் இலாகா ஒதுக்குவதில் அடிதடி கிளம்பியது.மறுப்

டி டெல்லி பறந்தார்,இந்த முறை அமிஷாவை பார்க்க முடியவில்லை.தற்போதைய பிஜபி தலைவர் ஜே.என் நட்டாவை விட்டு இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் டெல்லிக்கு வரக்கூடாது குறிப்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரை பற்றி இங்கே வந்து பேசவே கூடாது என்று சொல்லச் சொல்லிவிடார் அமித்ஷா.

17 பேரை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்த போதே அதிருப்தி துவங்கிவிட்டது உமேஷ் கத்தி,ரேணுகாச்சாரியா,அரவிந்த லிம்போவாலி,பாலச்சந்திர ஜர்கிஹோலி உட்பட 20 பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

எடியூரப்பா ஏற்கனவே டெல்லியை எதிர்த்து துள்ளிய கதைகள் இருப்பதால் அவரை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுக்க ஒரு புதுத்திட்டம் போட்டிருக்கிறாராம் அமித்ஷா.அதன்படி கர்நாடக மாநிலத்தில் மெஜாரிட்டியாக இருக்கும் மூன்று ஜாதிக்கும்,ஜாதிக்கொரு துணை முதல்வர் பதவி தரும்படி சொல்லிவிட்டாராம்.

சொன்னதோடு நிற்காமல் அந்த துணை முதல்வர்கள் பதவிக்கு ஆட்களையும் அவரே தேர்வு செய்திருக்கிறாராம்.குருபர் இனத்துக்கு ஈஸ்வரப்பா,தலித் சமூகத்துக்கு கோவிந்த் கர்ஜோல்,ஒக்கலிகாவிற்கு அரவிந்த் நாராயணா என்பது அந்த லிஸ்ட்டாம்.

இதற்கு காரணம் எடியூரப்பா தனது சொந்த ஜாதியான லிங்காயத்துகளுக்கே அதிக இடம் கொடுத்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டே இதற்குக் காரணம்.

ஒரு காலத்தில் எடியூரப்பாவை காப்பாற்றிய ரெட்டி சகோதரர்களும் தீவிர அரசியலில் இல்லை,அவர்களை காப்பாற்றிய சுஷ்மாவோ இந்த உலகத்திலேயே இல்லை.எட்டு திக்கும் அடிவிழுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் எடியூரப்பா.