கணவனின் அண்ணனுக்கு கல்யாணம்! கண்ணீர் விட்டு அழுத மச்சினிச்சி நடிகை! என்னடா நடக்குது இங்க?

கணவனின் சகோதரனுக்கு திருமணம் ஆன நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா கண்ணீர் வடித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.


பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தன்னைவிட வயதில் ஒன்பது வயது குறைந்த அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். ஜோனசின் குடும்பத்தினருடன் பிரியங்கா சோப்ரா மிகவும் நெருக்கமாகிவிட்டார். இந்தநிலையில் கணவரின் சகோதர் ஜோ ஜோனாஸ் - நடிகை சோபி டர்னரின் திருமணவிழாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

பிங்க் வண்ண சேலையில் மிகவும் அட்டகாசமாக கவர்ச்சிகரமாக காட்சி அளித்தார் பிரியங்கா சோப்ரா. அவரது கணவர் நிக் ஜோனஸ் கருப்பு நிற கோட் சூட் அணிந்து அட்டகாசமாக திருமண விழாவில் கலந்து கொண்டார். பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சிகரமான உடையானது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பலவிதமாக உடலசைவுகளை வெளிப்படுத்தி பிரியங்கா சோப்ரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் ஒரு புகைப்படம் தான் தற்போது பலரும் பேச வைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா கண்ணீர் வடித்தபடி காட்சியளிக்கிறார்.

கல்யாண வீட்டிற்கு சென்று ஏன் பிரியங்கா அழ வேண்டும் அதுவும் கணவரின் அண்ணனுக்கு தானே கல்யாணம் ஏன் இதற்கு இவர் அழுகிறார் என்று ரெட்டை அர்த்தத்தில் பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அது சரிதான் கணவரின் அண்ணனுக்கு கல்யாணம் என்றால் கொழுந்தியால் ஏன் அழ வேண்டும்?