அடிக்கு பயந்து ஆடைகளை கழட்டிய பெண்..! வீடியோ எடுத்து டிடெக்டிவ் நிபுணர் செய்த செயல்! மதுரை சம்பவத்தின் பரபர பின்னணி!

தன் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி இச்சைக்கு பணிய வைத்த டிடெக்டிவ் ஏஜென்டை காவல்துறையினர் கைது செய்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் ஊமச்சிகுளம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அன்னை வேலுநகர் என்ற பகுதியை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த். கணேஷ் ஆனந்தின் வயது 28. இவர் அய்யர்பங்களா என்ற பகுதியில் "ஸ்பைடர்" என்ற பெயரில் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வந்தார்.

நிறுவனத்திற்கு பணியாட்கள் தேவையென்று 18 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்திருந்தார். ஆந்திராவை சேர்ந்த பெண்ணொருவர் 5 வருடங்களாக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த லோடுமேன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த இளம்பெண் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடிக் கொண்டிருந்தபோது டிடெக்டிவ் ஏஜென்சி விளம்பரத்தை பார்த்து நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார். நேர்முகத்தேர்வில் கணேஷ் ஆனந்த் அந்த பெண்ணை தேர்வு செய்துள்ளார். 

ஊரடங்கு காரணத்தால் வீட்டிலேயே அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். 23ஆம் தேதியன்று அந்த இளம்பெண் தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது கணேஷ் ஆனந்த் மதிய நேரத்தில் கதவுகளை அடைத்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். அந்தப்பெண் மறுத்த காரணத்தினால், நேரடியாக அங்கிருந்த கட்டையால் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அடியில் தாங்கிக்கொள்ள இயலாமல் அந்தப் பெண் தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினாள். அதனை வீடியோ எடுத்துக்கொண்டு ஆசைக்கு இணங்காவிட்டால், வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

ஒருவழியாக அங்கிருந்து அந்த இளம்பெண் தப்பித்து, கணவரிடம் சென்று நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். ஆத்திரமடைந்த கணவர் தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று கணேஷ் ஆனந்தை கடுமையாக தாக்கியுள்ளார்.

கணேஷ் அண்ணன் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக புகார் அளித்ததால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

உடனே பாதிக்கப்பட்ட பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அப்போது காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது கணேஷ் முதன்முதலில் நகை கடை அலுவலகம் நடத்துவதற்கே அரசாங்கத்திடமிருந்து உரிமை பெற்றுள்ளார். அதன் பின்னர் பெண்களின் நடமாட்டம் அதிகரித்து வந்ததால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினரிடம் சினிமாவிற்கு ஆட்களை தேர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். சந்தேகம் தொடர்ந்து மறுத்து வந்ததால் துப்பறியும் ஏஜென்சி ஒன்று நடத்திவருவதாக கூறியுள்ளார்.

காவல்துறையினருக்கு கணேஷ் மீது சந்தேகம் வலுத்துள்ளது அவருடன் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.