ஊக்க மருந்து! இளம் வீரர் ப்ரித்வி ஷா கிரிக்கெட் விளையாட தடை விதித்த பிசிசிஐ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா ஊக்கமருந்து பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கியுள்ளார் .


இந்திய அணியின் பிரித்வி ஷா  தன்னுடைய  துடிப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார் .

இந்நிலையில் இளம் வீரர் ப்ரீத்வி ஷா ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது . இந்த தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து ஆனது பொதுவாக இருமல் மருந்துகளில் அதிக அளவு காணப்படும் .

கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடந்த முஸ்டாக் அலி தொடரின்  போது எடுக்கப்பட்ட பிரித்வி ஷாவின்   சிறுநீர் மாதிரியில் அவர் தடை செய்யப்பட்ட  Terbutaline என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 

இதன் மூலம் அவர் நவம்பர் 15ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடைவிதித்துள்ளது . 

இது பற்றி கருத்து கூறிய பிரித்வி ஷா தனக்கு மூச்சுக்குழல் பிரச்சினை இருப்பதாகவும் அது சரி செய்வதற்காகத் தான் இந்த மருந்தை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார் . ஆட்டத்திறனை ஊக்குவிக்கும் ஊக்க மருந்தாக இதனை நான் பயன்படுத்த வில்லை எனவும் அவர் கூறியுள்ளார் .