ஆழ்துளை கிணற்றை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு! தமிழகத்தை பாராட்டிய பிரதமர் மோடி!

கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை பயன் படுத்தி மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்றும் இந்த யோசனை தமிழகத்திலிருந்து தான் தமக்கு ஏற்பட்டதாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடி சமீபகாலமாகவே மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனிதனின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய கருத்துக்களை நாட்டு மக்களிடம் நேரடியாக பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான நேற்றைய தினம் மோடி அவர்கள் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் நாட்டு மக்க்ளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு நடைபெற்று வருவது குறித்து மிகவும் பாராட்டிப் பேசினார். மேலும் இந்த புதுமையான யோசனையை நாடுமுழுவதும் அமல் படுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த யோசனை முழுவதும் தமிழக மக்களிடம் இருந்தே தாம் பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற புதுமையான முயற்சிகளில் இளைஞர்களும் ஈடுபட்டு நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் நம் நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவரும் பிற மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொண்டு ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையை நிலை நாட்டவும் அது வழிவகுப்பதாகவும் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார்.