வயிற்றுக்குள் ஒரு குழந்தை! கையில் ஒரு மகன்! சாலையை கடந்த நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்!

சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண்ணும், மகனும் உயிரிழந்த சம்பவமானது மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாமல்லபுரத்திற்கு அருகே புதிய கல்பாக்கம் மீனவர் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திலகவதி. திலகவதியின் வயது 35.  இத்தம்பதியினருக்கு திருமுருகன் என்ற 4 வயது மகன் உள்ளான். கோவளத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக திலகவதி மற்றும் திருமுருகன் சென்றிருந்தனர். அப்போது சாலையை கடந்து கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்றுகொண்டிருந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் 2 பேரும் தூக்கி அடிக்கப்பட்டனர். 

சிறிது தொலைவு சென்று பறந்துவிடும் இதில் இருவருமே சம்பவயிடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். உடனடியாக பொதுமக்கள் விபத்து குறித்து அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தின்போது சத்தியமூர்த்தி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அவருக்கு வாக்கி டாக்கி மூலம் காவல்துறையினர் தகவலை தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமூர்த்தி, மனைவி மற்றும் மகனின் சடலங்களை பார்த்து கதறி அழ தொடங்கினார். இந்த சம்பவமானது பார்ப்போர் நெஞ்சை உலுக்கியது. விபத்து ஏற்படுத்தி தப்பிச்சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.