5 மாத கர்ப்பிணி பெண்ணை கடத்தி 4 பேர் மாறி மாறி அரங்கேற்றிய படு பாதக செயல்! உயிருக்கு போராடும் பரிதாபம்! கடலூர் திகுதிகு!

5 மாத கர்ப்பிணி பெண்ணை காரில் கடத்திய 4 பேர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூரில் சம்பந்தப்பட்ட பெண் கணவரை பிரிந்து, ஜெகன் என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று திரையரங்குக்கு இந்த பெண் தனியாக சென்றுள்ளார். அப்போது 4 ஆண்கள் அந்த பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக கோபமடைந்த பெண் தன்னுடைய செருப்பு எடுத்து அவர்களிடம் காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை சாலையோரத்தில் தள்ளிவிட்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

உடனடியாக அந்தப் பெண் இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரபாகரன், ராஜமுத்து, பிரசாந்த், முனுசாமி ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களை ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.